நேற்றைய தினம் புதிதாக மூன்று கொவிட் 19 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.குவைட்டில் இருந்து வருகை தந்து திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட மற்றைய தொற்றாளர் இந்தியாவின் மும்பாயில் இருந்து கட்டார் நோக்கி பயணிக்க வந்த நபராகும்.

எவ்வாறாயினும், இந்நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களில் 1446 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 493 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.