வெலிசறை கடற்படை முகாமை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெலிசறை கடற்படைத்தளம் மூடப்பட்டது.

இந்த நிலையில், பல கட்டங்களின் கீழ் இந்த தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறியுள்ளார்.