கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான்.

முகமாலை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தார் என்று பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.