இலங்கைக்கு வருகைதர முடியாமல் ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள், இன்று (21) அதிகாலை, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  மடகஸ்கார், மொசம்பிக், உகண்டா, கென்யா, ருவன்டா, டென்சானியா ஆகிய நாடுகளில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்குச் சென்றிருந்தோரே, இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.