Header image alt text

இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று (22) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

வவுனியா – பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மன்னார், எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது மோட்டார் வாகனத்தை புகையிரத பாதையின் அருகில் நிறுத்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இராணுவ வீரர்களை கொன்றதாக கூறியுள்ள கருணாவின் உரை பாரதூமானதெனத் தெரிவித்த  ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்,  கருணாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். Read more

கருணாவுக்கு அழைப்பு-

Posted by plotenewseditor on 22 June 2020
Posted in செய்திகள் 

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலத்தில், ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் 2,000 இராணுவ வீரர்களை கொன்றதாக அவர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறும் பொருட்டே, தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் ​அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை. இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 1950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனதுடன், அவர்களில் 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி ஆகிய நாள்களில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read more

கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,526 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை (22) 28 பேர் குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்திக் குறிப்பு –

Posted by plotenewseditor on 22 June 2020
Posted in செய்திகள் 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சர்வதேசக் கிளைகள் சார்பான ஊடகத் தொடர்பாளராக தோழர் செ. ஜெகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சர்வதேச ஊடக பரப்பில் அதிகளவு கலந்துரையாடல்கள், செவ்விகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், Read more