இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று (22) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வெ ளிநாட்டு கப்பல்களில் சேவையற்றுவதற்காக வருகை தந்த இந்திய கடற்படையினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.