முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலத்தில், ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் 2,000 இராணுவ வீரர்களை கொன்றதாக அவர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறும் பொருட்டே, தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் ​அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.