கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை. இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 1950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனதுடன், அவர்களில் 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.