தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) சுவிஸ் சூரிச் மாநகரின் புக்கேக் பிளாட்ஸ் (GZ Buchegg, Bucheggstrasse -93, 8057 Zürich) எனும் மண்டபத்தில் “முப்பத்தோராவது வீரமக்கள் தினம்” அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்கு இத்தால் மூலம் அறிய தருகின்றோம்.

இந்நிகழ்வில் “மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான அமரர்.தோழர்.க.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், மற்றும் அனைத்து இயக்கப் போராளிகள் பொதுமக்கள் உட்பட, போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த, அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வுடன், மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி மற்றும் கலை நிகழ்வுகள்” என்பன இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

(தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈர்ந்த, கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “வீரமக்கள் தினம்” வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.)

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ் கிளை.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) சுவிஸ் கிளை.

தொடர்புகளுக்கு…
O79.2104566 /// O79.1096342 ///  O79.2367235 ///  O78.9167111 ///O76.4454112 ///  O77.9485214