கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது. அவர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டமை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு அமைய குற்றச்செயலாக கருதப்படும் குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.