வவுனியா – கண்டி வீதியில், இன்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சைக்கிளுடன் மோதுண்டு, வீதியருகே இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, சைக்கிளை ஓட்டிச் சென்ற மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது 59) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.