கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 அளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை நேற்று இரவு 9.30அளவில் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் இலங்கை வந்துள்ளனர்.