இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாட்டில் இதுவரை 2037 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1661 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 823 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.