கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், மலேசியவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேற்படி 150 இலங்கையர்களும் தொழில் மற்றும் உயர் கல்விக்காக மலேசியாவுக்குச் சென்றவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.