மலர்வு- 10.03.1941 உதிர்வு-30.06.2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பு கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராஜா புஸ்பமலர் அவர்கள் இன்று (30.06.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) திருமலை மாவட்ட உதவிப் பொறுப்பாளர் தோழர் வசந்தன் அவர்களின் தாயார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அவரது சேனைக்குடியிருப்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை முற்பகல் 10மணியளவில் சேனைக்குடியிருப்பு பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
(தொடர்புகட்கு: வசந்தன் 0779917567)