1. அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம், இரண்டாம் தரங்கள் மற்றும் பாலர் பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2. நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது.
3. மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறிய 162பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சரியான முறையில் முகக்கவசம் அணியத் தவறிய 905பேருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.