1. மட்டக்களப்பு, வெல்லாவெளி 40ஆம் கிராமம் பிரதேசத்தில், கைவிடப்பட்ட காணியொன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டை, விசேட அதிரடிப்படையினர் நேற்று மீட்டுள்ளனர்.2. கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் மூவர் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

3. பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

4. இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,054 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய மூவரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இருவரும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

5. வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்றுகாலை இளைஞரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். 27 வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

6. கொரோனா வைரஸ் தொற்று காரணமான 3 நாடுகளில் சிக்கியிருந்த 91 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கட்டாரில் சிக்கியிருந்த 21 பேர் வந்துள்ளதுடன், மாலைத்தீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இரு விமானங்களிலும், அதில் முதல் விமானத்தில் 61 பேரும் இரண்டாவது விமானத்தில் 8 பேரும் வருகை தந்துள்ளனர். இதேவேளை அபுதாபியில் இருந்து ஒருவர் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.