1. மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடம் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியின் சிக்கி நேற்றிரவு வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

2. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் தங்கியிருந்த மேலும் 117 இந்தியர்கள், அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் 04ஆம் கட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

3. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற சி.ஐ.டி குழுவினர், பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

4. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது, தலாவ, தம்மென்னாவ வாவிக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன்போது, அங்கு வந்த மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

5. கிளிநொச்சி இயக்கச்சி, நித்தியவெட்டை பகுதியில் இன்றுகாலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இரத்தினபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.