1. இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது. இன்று சௌதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது அவசியம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

3. எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க காவல்துறை 0112472757. 0115978701 ஆகிய தொலைபேசி இலக்கங்களயும் 0112345553 என்ற தொலைநகல் இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

4. கொரோனா பீதி காரணமாக வெளிநாடுகளில் தொழில் புறியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்ட இலங்கையர்களுக்கு இவர்கள் உள்நாட்டில் சுய தொழிலில் ஈடுப்படுவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளார்.

5. கொரோனா வைரஸ் நிலைமையால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரக்கோரி சுதந்திரத்துக்கான மகளிர் அமைப்பு கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப திணைக்கள முன்றலில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6. பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மாவட்ட செயலகத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் மல்லாகத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் உத்தியோகஸ்தர் காயமடைந்துள்ளார். அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

7. கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் கமலகரன் (வயது-40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்றுமுன்தினம் (06) இரவு படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (07) பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் (ரிஐடி) கையளிக்கப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தராவார். முன்னதாக இந்த சம்பவத்தில் காயமடைந்தவரும், ஆசிரியை ஒருவரும் கைதாகியுள்

8. கிளிநொச்சி – இயக்கச்சியில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை உயிரழந்துள்ளார். தங்கராசா தேவதாஸன் (43-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

9. .கிளிநொச்சி வைத்தியசாலைக்கான விபத்து பிரிவு இல்லாமையால் சிரமங்கள் ஏற்படுவதாக மயக்க மருந்து தீவிர சிகிச்சைப்பிரிவின் வைத்திய நிபுணர் நாகேஸ்வர் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். ஏ9 வீதியில் நடக்கும் அதிகளவான விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையிலேயே அதிகமாக அனுமதிக்கப்படுவதாகவும், இவர்களின் சிகிச்சைகளிற்கான விபத்து பிரிவு அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10. வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் இன்று காலை ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு ஒரு மணிநேரம் தடை ஏற்பட்டிருந்தது.