வவுனியா திருநாவற்குளத்தில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது புதல்வன் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் நேற்றையதினம் சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாவற்குளம் மாணிக்கதாசன், வசந்தன் மைதானத்தைச் சேர்ந்த, யங் லைன் விளையாட்டுக் கழகத்திற்கு 42 வர்ண சீருடைகள், 67 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், 50 வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் கந்தையா சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.மகேந்திரன்(ராஜா), செயலாளர் வே.சிவபாலசுப்ரமணியம் , செயற்குழு உறுப்பினர் குகதாசன் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.