வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அமரர்  அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுருவச்சிலையின் முன்பாக  அவரது 31வது நினைவுதினமான இன்று (13/07/2020) காலை மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரையும் ஆற்றப்பட்டது.புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அமிர் ஞாபகார்த்தக்குழு தலைவர் கௌரிகாந்தன், பிரதேசசபை தலைவர் நடனேந்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நாள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.