மன்னாரில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அலுவலகத்தில் இன்று 31ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன. இன்றுகாலை 10. 15மணியளவில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ், கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்று மௌனஅஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றன.