தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 31வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது. வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று 13/07/2020 காலை 09.30 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக தோழர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு இன்றிலிருந்து எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.