தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 10.00 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது.வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தலைமையில் திரு. ராஜேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார்.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொதுச் செயலாளர் சு.சதானந்தம், உபதலைவர் வி.ராகவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் பிரதி தலைவர் மயூரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.மகேந்திரன் (ராஜா), செயலாளர் வே.சிவபாலசுப்ரமணியம், கிளிநொச்சி மாவட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.