மட்டக்களப்பு நாவற்குடாவில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் காரியாலயத்தில் இன்று (15.07.2020) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புளொட்டின் 31வது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளருமான பொ.செல்லத்துரை (கேசவன்), முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இரா.துரைரெட்ணம், இ.பிரசன்னா, போரதீவு பற்று பிரதேச சபை உப தவிசாளர் நா.தர்மலிங்கம், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்திய குழு உறுப்பினர்கள் ந.ராகவன் , கா.கமலநாதன், க.கிருபைராஜா, மாவட்ட குழு உறுப்பினர் த.விமலநாதன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உயிர்நீத்த தோழர்களின் 14 குடும்பங்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.