1. கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2 ஆயிரத்து 753 பேராக பதிவாகியுள்ளது. குறித்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவராவார்.

2. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 13 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2077ஆக அதிகரித்துள்ளது.

3. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,752 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று 22 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் 14 பேர் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள். மேலும் 7 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவர்களாவர்.

4. கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில், நேற்று 11 வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்மைவாக, இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

5. யாழ் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

6. கிளிநொச்சி ஏ-9 வீதியில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். முதியவர் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்றப்பட்போது பஸ் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

7. சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என்பதோடு சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

8. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை 26 ஆம் திகதி நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

9. விசேட சோதனை நடவடிக்கைகளின் போது நேற்று இரவு 08 மணிமுதல் இன்று காலை வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 248 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது வேறு சில குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 2596 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

10. 200 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இன்றுகாலை புத்தளத்தில் கைதுசெய்யப்பட்ட கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளரை உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்த கலால்வரித் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

11. செயற்கையாக தயாரிக்கப்பட்ட 3150 போதை முத்திரைகளுடன் நபர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பகதலே வீதியில் தங்குமிடம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை கோகில வீதியில் வசிக்கும் 26 வயதுடையவரே கைதாகியுள்ளார்.

12. பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்காலத்தில் பின்பற்ற எதிர்பார்க்கும் வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தி, பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் இன்று அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக ‘தேசிய பிறப்புச் சான்றிதழ்’ என்றே கூறப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழில் பிறப்பின் போது வழங்கப்படும் அடையாள இலக்கமும் உள்ளடக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. மிக பாதுகாப்பான கடதாசியில் டிஜிட்டல் முறையில் அச்சிடப்படவுள்ள தேசிய பிறப்புச் சான்றிதழில், பார் கோட் அடையாளம், அதற்கான இலக்கம், WATER MARK உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்களைப் பாதிக்கும் விடயமாக பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் பெற்றோரின் திருமண நிலை தொடர்பான விடயம் பிறப்புச் சான்றிதழில் இருந்து அகற்றப்படவுள்ளது. எனினும், பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தேசிய பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.