1. 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது. 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு 4 வருடங்களாக போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

3. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று நேற்று முன்தினம் கடலில் தவறி வீழ்ந்த 72 வயதான மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் இன்றுகாலை கரையொதுங்கியுள்ளது.

4. வவுனியா கிடாச்சூரி பகுதியில் செட்டிகுளம், மெனிக்பாமைச் சேர்ந்த 35வயதான மோகன் சிவகுமார் என்ற குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டின் முதலாம் மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

5. தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் (கபே) அமைப்பு தெரிவித்துள்ளது.

6. ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

7. ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற போதை பொருளுக்கு அடிமையான சந்தேகநபரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. ஐனுர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிக்க உதவிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு பொலிஸ்மா அதிபரினால் சிறப்பு பரிசுத் தொகையொன்று வழங்கப்படவுள்ளது.

9. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை, 2094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

10. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2763ஆக அதிகரித்துள்ளது.

11. கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் யாழ். மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

12. நேற்றுமாலை 6 மணியளவில் வெள்ளவத்தை, மயூரா வீதியின் பின்புறத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் 25 வயதுடைய இந்திய பிரஜையான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

13. இலங்கையில் இதுவரை சுமார் 150,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

14. நேற்றைய நாளில் மாத்திரம் 1380 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

15. வெள்ளை வேனைப் பயன்படுத்தி 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

16. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்புடனான போராட்டத்தில் வைத்தியசாலை முன்பாக ஈடுபட்டனர். இதன்போது குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்கப்படுமா?, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், சுகாதார சேவைக்கான மதிப்பு இவ்வளவுதானா?, அரச ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்?, வேண்டும் வேண்டும் பாதுகாப்பு வேண்டும், நீதி கொடு நீதி கொடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடு போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.