தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (26.07.2020) முற்பகல் 10.30மணியளவில் வவுனியா கோவில்குளம் ஆதி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் வேட்பாளர்களான திரு. ஜி.ரி லிங்கநாதன், திரு. க.சிவிலிங்கம் ஆகியோர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.