தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் சுவிஸ்கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2020ம் திகதி) மதியம் இரண்டு மணியளவில் சுவிஸ் சூரிச் புக்கேக்பிளாட்ஸ் மண்டபத்தில், கழகத்தின் சுவிஸ்கிளை தோழர்.ரஞ்சன் அவர்களின் தொகுப்பில், மிக சிறப்பாக மண்டபம் நிறைந்த பொதுமக்களின் பங்குபற்றுதலில் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இதன்போது ஆரம்ப நிகழ்வாக கழக சுவிஸ்கிளையின் பொறுப்பாளர் தோழர் ஆனந்தன், மூத்த உறுப்பினர் தோழர்.சித்தா, தோழர்.முருகதாஸ், ஜேர்மன் தோழர்களான அப்பன், யூட் உட்பட தோழர்கள், ஆதரவாளர்களினால் நினைவுசுடர் ஏற்றப்பட்டு அனைவராலும் “மரணித்த செயலதிபர், கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள்” ஆகியோருக்கான மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரவேற்புரையை சுவிஸ் கிளைத் தோழர்.சிவா நிகழ்த்த, திருமதி வாணிசர்மா அவர்களின் மாணவியால் நடைபெற்ற வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, சுவிஸ் கிளையின் சார்பிலான தலைமையுரையினையை சுவிஸ் கிளைத் தோழர் தீபன் அவர்களினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் புளொட் சுவிஸ்கிளை சார்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த கவிதையும் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சன் அவர்களினால் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து “சுவிஸ் வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு “புளொட்” தலைவர் சித்தார்த்தன் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை சுவிஸ் கிளைத் தோழர் மனோ அவர்களினால் வாசிக்கப்பட்டது. அதுபோல் புளொட் பிரான்ஸ் கிளை சார்பில் தோழர்கள் ரங்கா, தயாளன் ஆகியோர் அனுப்பி வைத்த அறிக்கையினையை சுவிஸ் கிளைத் தோழர் ரமணனும், புளொட் யு.கே கிளை சார்பில் தோழர் பாலா அவர்கள் அனுப்பி வைத்த அறிக்கையினையை சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சன் அவர்களும் வாசித்தளித்தனர். இதனைத் தொடர்ந்து திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் “ஆர்ட்ஸ் ஒப் அகாடமி” மாணவிகளினால் பல்வேறு வகையான நடன நிகழ்வுகளும் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் தமிழர் கலாசார மன்றத்தின் சார்பில் திரு.இரத்னகுமார் உரையாற்றியதுடன், புளொட் நோர்வே கிளை சார்பில் தோழர் நோர்வே ராஜன் அனுப்பி வைத்த அறிக்கையினையை சுவிஸ் கிளைத் தோழர் மனோவும், புளொட் ஜேர்மன் கிளை சார்பில் தோழர் பவானந்தன் அனுப்பி வைத்த அறிக்கையினையை சுவிஸ் கிளைத் தோழர் சிவாவும், புளொட் அமெரிக்க கிளை சார்பில் தோழர் கோபி அனுப்பி வைத்த அறிக்கையினை சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சனும் வாசித்தளித்தனர்.

இடையிடையே திருமதி புஷ்பவதனா அவர்களின் மாணவ மாணவிகளினால் பல இசை நிகழ்வுகளும், திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் “ஆர்ட்ஸ் ஒப் அகாடமி” மாணவிகளினால் பல்வேறு வகையான நடன நிகழ்வுகளும், முத்தாய்ப்பாக “யோகா” குறித்த தெளிவுரையும், விளக்க நிகழ்வும் நடத்தப்பட்டது.

இறுதியாக தோழர் வரதன் அவர்களின் நன்றியுரையுடன் வீரமக்கள் தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. மேற்படி நிகழ்வை உலகெங்கும் இருந்தும் பல புளொட் தோழர்கள் “சூம்” வலைத்தளம் ஊடாக நேரடியாகக் கண்டுகளித்ததும் குறிப்பிடத்தக்கது.