கொழும்பு துறைமுகத்தின் பிரதான வீதியை தடுக்காமலும் அருகிலுள்ள அரச நிறுவனங்களுக்குள் உள்நுழையாமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு அமைய தற்போது குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.