சட்டவிரோதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபடுவார்களாயின் அவர்களை கைது செய்வதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸார் அவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸ் ரோந்து சேவையும் இன்று மாலை 6 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.