நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவொன்றை அங்கொடை தேசிய தொற்றநோயியல் நிறுவனத்தில் ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் Covid–19 அவசர சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 3 மாதங்களில் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இதன் நிர்மாண பணிகளை நிறைவு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.