இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்காளர்கள், புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியுமென, மன்னார் மாவட்டச் செயலாளரும் மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.