இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.