நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை, வவுனியா மாவட்டச் செயலகம் அசௌகரியத்துக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டச் செயலகத்துக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இருந்த போதிலும், மாவட்டச் செயலகத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள காமினி மகா வித்தியாலய மைதானத்தில், உத்தியோகத்தர்களின் வாகனங்களை நிறுத்தி வருமாறு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே இந்தத் தகவல் வழங்கப்படாமையால், கடமைக்கு சமூகமளித்த உத்தியோகத்தர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.