2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை 6ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 7 மணி மற்றும் 8 மணிக்கு மாவட்ட ரீதியில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயோட்சை குழுக்கள் சார்ப்பில் பிரதிநிதிகளை முன்வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.