நாளை பொதுத் தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் 20ம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.