லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் இவ்வெடிப்பு நடந்துள்ளது.

ஒரு கிடங்கில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிந்திய செய்திகளின்படி…

லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் ​அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு ​சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.​