பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது. குறித்த தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னர் இம்முறை பொதுத் தேர்தலின் தேசிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பெயர் விபரங்கள் நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.