9ஆவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 9.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.