லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார். வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க, பணியாளர்கள் உள்ளிட்ட 285 இலங்கையர்களை ஏற்றிய விமானம் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். இந்த வெடிப்பு சம்பவத்தில் 157பேர் பலியானதுடன், 4000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.