நாட்டில் நேற்று (09) கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்படுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் சேனாபுர புனர்வாழ்வு மையத்திலுள்ள இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 254 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.