வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 176 இலங்கையர்கள் இன்று(10) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரில் இருந்து 28 இலங்கையர்களும்,  அதிகாலை 4.10 மணியளவில் ஜப்பானில் இருந்து 148 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.