தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரஷ்யா நாட்டு பிரஜை ஒருவர் நேற்று தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர், நேற்று மாலை, மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில், ரஷ்யா  பிரஜையை ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும்,  குறித்த ரஷ்யா பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

இவரது, பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.