ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் காணொளி அழைப்பு மூலம் பேசிய புதின், “இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.

என் மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.