மலர்வு- 06.05.1976 அதிர்வு- 12.08.2020

மட்டக்களப்பு அரசடியை பிறப்பிடமாகவும், திமிலைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் அன்பழகன்(உலகன்) அவர்கள் இன்று 12.08.2020 புதன்கிழமை அதிகாலை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான தோழர் உலகன் அவர்கள், .போராட்டப் பாதையிலே கழகம் பல்வேறு தடைகளை சந்தித்த பொழுதெலாம் தளராமல் தொடர்ந்து செயற்பட்டு வந்தார்.

கழகப் பணிகளிலே தன் சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்ததோடு மரணிக்கும் வரையில் கழகத்தின் செயல்பாடுகளில் தீவிர பங்காற்றினார்.

அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கும், கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் நாளை காலை 10.00மணியளவில் ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புகட்பு : 0779818459 (கேசவன்)