மாலைத்தீவில் தங்கியிருந்த 179 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன்  விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்  நாடு திரும்பியுள்ளனர்.யு.எல் – 102 என்ற விமானத்தில் இன்று(13) பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பயணிகள் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் அதிகளவானவர்கள் அந்நாட்டு சுற்றுலா துறையில் பணிபுரிந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாடு திரும்பியவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.