கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 306 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.சீனாவில் இருந்து 10 பேர் ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலும் மற்றும் ஓமானில் இருந்து 296 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றிலும் நேற்று பிற்பகல் (14) கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.