வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.அத்துடன் உரிய போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடங்களுக்கு மேலும் தெரிவித்துள்ள அவர்,

தனக்குக் கிடைத்த தகவலின்படி தற்போது வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகளெல்லாம் மாலை  6 – 7 மணிக்கு பூட்டப்பட்டு பொது மக்களின் நடமாற்றம் குறைந்து போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்த நிலைக்கு வருவதாக அறிந்துள்ளதாகவும்,  தற்போது நாட்டிலே இயல்பு நிலை காணப்படுவதாலும் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறாவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே வர்த்தக சங்கங்கள், அரச , தனியார் போக்குவரத்துத் துறைகள் ஆகியோருடன் தான் நடத்திய கலந்துரையாடலின் போது வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகள் அனைத்தும் இரவு 10 மணிவரை முழுமையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுருத்தியுள்ளார்.