நாட்டுக்குள் முப்படையினராலும் நடத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு சென்றுள்ளனர்.அதன்படி ​இன்று காலை ஆறு மணி வரையில், 30247 பேர் தனிமைப் படுத்தலை நிறைவு செய்துகொண்டுள்ளதுடன், தற்போது நடத்திச் செல்லப்பட்டும் 41 தனிமைப்டுத்தல் நிலையங்களுக்குள் 4689 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என்றும் நேற்றை தினம் மாத்திரம் 160 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.